இலங்கை: தமிழர் பகுதிகளில் தேர்தல் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்குப் பகுதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஆறுமாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கியதேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் நடைபெற்ற 222 இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 217 இடங்கள் கிடைத்தன. நான்கே இடங்களைப்பெற்ற அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணிக் கட்சி படுதோல்வி அடைந்தது.

இலங்கையில் தான் மேற்கொண்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிக்காக மக்கள் அளித்துள்ள பரிசுதான்இந்த வெற்றி என்று ரணில் கூறியுள்ளார்.

இதற்கிடையே இரண்டாவது கட்ட உள்ளாட்சித் தேர்தல் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வடகிழக்குமாகாணங்களில் வரும் 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு இலங்கையில் போதுமான வாக்குச் சாவடிகளை அமைப்பதில்சிரமம் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

இதனால் இந்த இரண்டாவது கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்தல்கமிஷன் கூறியுள்ளது.

இதையடுத்து வரும் செப்டம்பர் 25ம் தேதிதான் தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாணப் பகுதிகளில்உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+