ராஜ்யசபாவில் "பொடோ" தோல்வி
டெல்லி:
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமான "பொடோ" நேற்று (வியாழக்கிழமை) ராஜ்யசபாவில்தோல்வியடைந்ததையடுத்து, வரும் 26ம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அச்சட்டம்நிறைவேற்றப்படவுள்ளது.
மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட "பொடோ" சட்ட மசோதா, நேற்று ராஜ்யசபாவில் தாக்கல்செய்யப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னதாகவே அம்மசோதாவைத் தாக்கல் செய்யவே கூடாது என்று காங்கிரஸ் குரல் எழுப்பியது.மக்களவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு "பொடோ" மசோதாவை அனுப்ப வேண்டும் என்று அக்கட்சி தீர்மானம்கொண்டு வந்தது.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக (அதாவது அரசுக்கு எதிராக) 113 வாக்குகளும், எதிராக 98 வாக்குகளும்கிடைத்தன. இதனால் அந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. "பொடோ" மசோதாதோல்வியடைந்ததாகவும் கருதப்பட்டது.
இதையடுத்து ஒரு வழியாக நேற்று இரவு 10.15 மணிக்கு ராஜ்யசபாவில் "பொடோ" மசோதாவுக்கான வாக்கெடுப்புநடைபெற்றது. அரசுக்கு ஆதரவாக 89 வாக்குகளும் எதிராக 103 வாக்குகளும் கிடைத்ததையடுத்து, இம்மசோதாதோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைக் கேட்டதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பிக்கள் அனைவரும் ஒருவரையொருவர்கட்டித் தழுவி வாழ்த்துக்களைக் கூறிக் கொண்டனர்.
ராஜ்யசபாவில் "பொடோ" மசோதா தோல்வியடைந்ததையடுத்து, வரும் 26ம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தைக் கூட்டி இம்மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க 26ம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம்நடைபெறும் என்று ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், அன்று நடைபெறும் "பொடோ" மசோதா குறித்து நடைபெறும்வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications