இலங்கை சிறையிலிருந்து 29 தமிழக மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் உள்ள சிறைகளில் வாடும் 29 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய யாழ்ப்பாணத்தில் உள்ளநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் கடல் பகுதிகளில் மீன் பிடித்ததாகக் கூறி, பல தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துக்கொண்டு சென்றனர்.

இதையடுத்து இந்த மீனவர்களின் உறவினர்கள் தமிழக அரசிடம் புகார் கூற, அது மத்திய அரசை நாடியது. தமிழகமீனவர்களை விடுவிக்கும் படி மத்திய அரசும் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டது.

அதன்படி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டயாழ்ப்பாண நீதிமன்றம், 17 தமிழக மீனவர்களை விடுவிக்க நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த 29 மீனவர்களும் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 70 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. பின்னர் யாழ்ப்பாணநீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+