தமிழகத்திலிருந்த 18 பாகிஸ்தானியர்கள் திடீர் மாயம்
சென்னை:
விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியிருந்த 18 பாகிஸ்தானியர்கள் திடீரென்று காணாமல் போய்விட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியாமுழுவதும் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.இவர்கள் நடத்திய கணக்கெடுப்பில் தமிழகத்தில் மட்டும் 120 பாகிஸ்தானியர்கள் இருப்பது தெரிய வந்தது.
இவர்களில் 97 பேர் விசா காலம் முடிந்தும் பாகிஸ்தான் செல்லாமல் இங்கேயே தங்கியுள்ளனர். இவர்களில் சிலர்விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தங்கியிருந்த 18 பாகிஸ்தானியர்கள் திடீரென்று மாயமாகி விட்டனர். காணாமல்போயிருக்கும் இவர்கள் ஏதேனும் சதி திட்டங்களை நிறைவேற்றுவதற்காக காணாமல் போயிருப்பார்களா என்றுபோலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு 18 பாகிஸ்தானியர்களையும் தேடி வருகின்றனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications