ஆண்டிப்பட்டி தேர்தல் முறைகேடு: வழக்கு தொடர திமுக முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி தேர்தலில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறும் திமுக, இது தொடர்பாக நீதிமன்றத்தில்வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்அன்பழகன் உள்ளிட்ட தலைவர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இப்பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

ஆண்டிப்பட்டி தொகுதி வாக்காளர் பட்டியலில் ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதைப்பலமுறை திமுக எடுத்துக் கூறியும் தேர்தல் கமிஷன் அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

தேர்தல் கமிஷனின் இந்தப் போக்கு திமுகவுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. எனவே சட்டரீதியாக இவ்விஷயத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வழக்கும் தொடரப்படும்.

அதிமுக அரசு பழி வாங்கும் போக்கைக் கைவிட்டு மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.

அதே போல் போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் எண்ணத்தையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தன்னுடைய செயல் திட்டத்தைத் தொடர வேண்டும் என்று திமுகபொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+