"தமிழகம் அமைதிப் பூங்காவா, அமளிக் காடா?" - ராமதாஸ் கேள்வி
சென்னை:
சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சாலை விபத்துக்கள் அதிகம் நடந்து கொண்டிருப்பதால்,தமிழகம் அமைதிப் பூங்காவா அல்லது அமளிக் காடா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
சென்னையில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சமீப காலத்தில் சாலை விபத்துக்கள் அதிகம் நடந்துள்ளன.
சாலை விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளரிடம் கோரிக்கைவிடுத்தேன். ஆனால் தமிழக அரசு இதைக் கண்டு கொண்ட மாதிரியாகவே தெரியவில்லை.
மேலும் கொலை, கொள்ளை, கற்பழிப்புச் சம்பவங்களும் தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ளன. இதனால்தமிழகம் அமைதிப் பூங்காவா அல்லது அமளிக் காடா என்ற கேள்வி எழுந்துள்ளது.
யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைதான் தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது.
அதிமுகவுக்கு பலமான, உண்மையான எதிர்க் கட்சியாகவே நாங்கள் எப்போதும் செயல்படுவோம். திமுகஉள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் எப்போதும்போலவே தோழமையுடன் இருக்கவே விரும்புகிறோம்.
வரும் 27ம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களில் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு தகுந்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications