காங்கிரஸ்-தமாகா இணைப்பு: ஏப்ரல் 1ல் பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காங்கிரஸ் கட்சியுடன், தமாகாவை இணைப்பது தொடர்பாக ஏப்ரல் 1ம் தேதி சென்னையில் தமாகா தலைவர்வாசனுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழகபொறுப்பாளருமான ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
காங்கிரஸை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் காங்கிரஸில் இணையும் தருணம் வந்து விட்டது. குமரிஅனந்தன், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரை மீண்டும் காங்கிரஸில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுவிட்டோம்.
இதைத் தொடர்ந்து தமாகாவையும் காங்கிரஸில் இணைக்க முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
வரும் ஏப்ரல் 1ம் தேதி சென்னையில் தமாகா தலைவர் வாசனை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன்என்று ரமேஷ் சென்னிதாலா கூறினார்.












Click it and Unblock the Notifications