ஈஸ்டர் திருநாள்: ஜெ. வாழ்த்து
சென்னை:
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை)வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இயேசுவைச் சிலுவையில் அறைந்த தினமான புனித வெள்ளி நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து வரும்ஞாயிற்றுக்கிழமை அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாள் உலகெங்கிலும் உள்ளகிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் திருநாளையொட்டி ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
புனித இயேசுபிரான் மனிதனாகத் தோன்றி மக்களிடையே அன்பையும் சகோதரத்துவத்தையும் போதித்தார்.
கொடியவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்த நாள்தான் புனித வெள்ளி என்று உலகெங்கும வாழும்கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. அவர் மீ"ண்டும் உயிர்த்தெழுந்த நாள்தான் ஈஸ்டர் திருநாளாகக்கொண்டாடப்படுகிறது.
ஏமாற்றக்காரர்களாலும், சதிகாரர்களாலும், சூழ்ச்சிக்காரர்களாலும் மக்கள் பட்ட துன்பங்களை எல்லாம் போக்கிஅவர்களைப் பாவத்திலிருந்து விடுவித்து மக்களின் பாவங்களை, தானே ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நல்வழிகாட்டுவதே இயேசு பெருமானின் பெருவாழ்வாக இருந்தது.
நம் இந்தியத் திருநாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து, நாட்டில் அமைதியின்மை நிலவி வரும் இந்த வேளையில்தமிழக மக்கள் அனைவரும் சகிப்புத் தன்மையை வளர்த்து அனைவரும் சகோதரர்கள் என்ற சமுதாய ஒற்றுமைக்குவழிகோல வேண்டும் என்பதே என்னுடைய ஈஸ்டர் செய்தியாகும்.
ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடி மகிழும் எனதருமைப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்தவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications