மலிவு விலை மதுவால் அரசுக்கு ரூ.50 கோடி நஷ்டம்
சென்னை:
மலிவு விலை மதுவால் 2 மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று நிதித்துறைசெயலாளர் ஆர்.சந்தானம் கூறியுள்ளார்.
புதன்கிழமை சட்டசபையில் தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்தார். பட்ஜெட்உரையின்போது மலிவு விலை மதுவால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மலிவு விலை மது வரும் வரும் தமிழ் புத்தாண்டுமுதல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சந்தானம் நிருபர்களிடம் கூறியதாவது:
மலிவு விலை மதுவால் அரசுக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த திட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் பார் வசதிக்காக லைசென்சு கட்டணம் மூலம் ரூ.50 கோடி கிடைக்கும்.
நிதி நெருக்கடியில் இருந்து மீளும் வகையில் முழு அளவிளான ஒரு கட்ட உதவித்திட்டம் வகுக்க வேண்டும் என்றுநமது முதல்வர், பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் தமிழகத்திற்கு ரூ.3,000 கோடி மானியமாககிடைக்கும்.
அரிசி, கோதுமை மீது விற்பனை வரி விதிக்கப்பட்டுள்ளது, திரும்பப் பெறப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள் என்று சந்தானம் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications