ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குத்திக் கொலை: கோவையில் பதற்றம் - போலீசார் குவிப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்துகோயம்புத்தூரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான முருகேசன் என்பவர் இன்று (வியாழக்கிழமை) காலை கத்தியால்குத்திக் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
கோயம்புத்தூர்-புதூர் தெற்கு தாலுகா ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரச் செயலாளர் முருகேசன் (35). இன்று காலைதன்னுடைய ஜெராக்ஸ் கடையைத் திறப்பதற்காக அவர் வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது முருகேசனை வழிமறித்த ஆறு பேர் கொண்ட ஒரு கும்பல், அவரைப் பயங்கரமாகத் தாக்கியது. பின்னர்அவரைக் கத்தியால் சராமாரியாகக் குத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடி விட்டது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசன் உடனடியாக கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தப் படுகொலையை அடுத்து கோயம்புத்தூரின் பல பகுதிகளிலும் கடும் பதற்றம் நிலவியது.கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணித்தொண்டர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூரின் பல பகுதிகளில் இன்று கடையடைப்பும் நடந்தது.
கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரத்தைச் சேர்ந்த சுல்தான் மீரான் என்ற முஸ்லீம் பிரமுகர் நேற்றுதான் கொலைசெய்யப்பட்டார். அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய நண்பர் அவரைக் கொலை செய்ததாகக்கூறப்படுகிறது.
இந்தக் கொலையைத் தொடர்ந்து இன்று ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை செய்யப்பட்டிருப்பதால்கோயம்புத்தூரில் பெரும் பீதி நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications