காவலருக்கு அறை விட்ட பெண் போலீஸ் அதிகாரி: மதுரை போலீசார் கொந்தளிப்பு
சென்னை:
சல்யூட் அடிக்காத காரணத்தால், ஆயுதப் படை போலீசாரை கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் மண்டல காவல்துறை காவலர்கள் சங்கத்தலைவர் ஒச்சாத் தேவர் கூறியுள்ளார்.
மதுரை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர் வன்னியன். கடந்த திங்கள்கிழமை இவர் பணியில்இருந்தபோது பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரெஜினா அங்கு வந்தார்.
யூனிபார்மில் இல்லாமல் சாதாரண உடையில் ரெஜினா வந்ததால் அவரை முதலில் வன்னியனுக்கு அடையாளம்தெரியவில்லை. இதனால் அவர் சல்யூட் அடிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ரெஜினா, வன்னியனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதைப் பார்த்து போலீஸ்நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அறை வாங்கிய வன்னியன் கோபமடைந்து ரெஜினாவுடன் வாக்குவாதம் செய்தார். அவரும் பதிலுக்கு பேசவேநிலைமை மோசமானது. தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து இருவரையும்சமாதானப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் மதுரை மாநகர போலீசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் மத்தியில் ஒருபோலீசைக் கன்னத்தில் அறைந்தது பொறுத்துக் கொள்ள முடியாத செயல் என்று தென் மண்டல காவல்துறைகாவலர்கள் சங்கத் தலைவர் ஒச்சாத் தேவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரெஜினா மிகவும் திமிர்த்தனமாக நடந்து கொண்டுள்ளார். இவரது செயல் குறித்து மாநில டிஜிபி, முதல்வர்ஜெயலலிதா, உள்துறை செயலாளர், தென் மண்டல ஐ.ஜி. மற்றும் பலருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
பெரியகுளம் எம்.பி. தினகரனிடம் இதுகுறித்து புகார் செய்யவுள்ளோம். அவர் மூலம் தமிழக முதல்வர்ஜெயலலிதாவையும் பார்த்து புகார் கொடுப்போம் என்று ஒச்சாத் தேவர் அக்குறிப்பில் கூறியிருந்தார்.
மேலும், இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஒச்சாத் தேவர் தலைமையில் இந்தச்சங்கத்தைச் சேர்ந்த பல காவலர்கள் ரகசியமாக ஒரு கல்யாண மண்டபத்தில் சந்தித்து விவாதித்தனர்.
தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாரும் கூட இதில் ஏராளமானஅளவில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, வன்னியனை அறைந்த விவகாரம் தொடர்பாக ரெஜினா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுமதுரை மாநகர போலீஸ் உயரதிகாகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications