தனியார் மயமாக்கலை எதிர்த்து பஸ் ஊழியர்கள் போராட முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போக்குவரத்துத் துறை தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து போராட்டங்கள், பேரணிகள் நடத்த பல்வேறுசங்கங்கள் முடிவு செய்துள்ளன.

போக்குவரத்துக் கழகங்களைப் படிப்படியாகத் தனியார் மயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில்தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டிலும் இது தொடர்பான உறுதியான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தனியார் மயமாக்கலை எதிர்த்துதமிழகம் முழுவதும் போராட போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்படி வரும் ஏப்ரல் 11ம் தேதி அனைத்து போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்களின் முன்பாகஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அனைத்து ஊழியர் சங்கங்களின் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 18ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையை நோக்கி தமிழகபோக்குவரத்துக் கழக ஊழியர்கள் பேரணி நடத்துவார்கள் என்றும் செளந்தரராஜன் தெரிவித்தார்.

இந்த இரண்டு போராட்டங்களையும் அரசு கண்டு கொள்ளாவிட்டால், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில்குதிப்பது எனவும் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+