ஜெ.யிடம் மனு கொடுக்க வந்தவர் மயக்கம் - கோட்டையில் மீண்டும் பரபரப்பு
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பதற்காக பெங்களூரில் இருந்து வந்த நபர் தலைமைச்செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மயக்கம் போட்டு விழுந்ததால், அங்கு மீண்டும் பெரும் பரபரப்புநிலவியது.
ஜெயலலிதாவைப் பார்த்து மனு கொடுப்பதற்காக இரண்டு நாட்கள் காத்திருந்து, அது முடியாமல் போகவே கடந்தபுதன்கிழமை கோயம்புத்தூரைச் சேர்ந்த வேலு-நளினி தம்பதியர் தலைமைச் செயலகத்தில் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டனர்.
அதேபோல் நேற்றும் கோட்டைக்கு வந்த சேலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஜெயலலிதாவின் காரின் முன்னால்பாதுகாப்புக்காகச் சென்று கொண்டிருந்த காரின் முன் விழுந்து, அதன் மூலம் ஜெயலலிதாவின் கவனத்தைக்கவர்ந்து மனு கொடுக்க முயற்சித்தார்.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சிவசங்கரன் என்ற நபர் இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தார். இவர்ஜெயலலிதாவைச் சந்தித்து மனு கொடுப்பதற்காகக் காத்திருந்தார்.
பின்னர் இன்று பிற்பகல் ஜெயலலிதாவின் தனியறையை நோக்கி மனுவுடன் சென்று கொண்டிருந்த சிவசங்கரன்திடீரென்று சுருண்டு விழுந்து மயங்கினார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிவசங்கரனை அள்ளிக் கொண்டுபோய் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிவசங்கரன் இரண்டு நாட்களாக எதுவுமே சாப்பிடவில்லை என்று கூறினர்.தற்போது அவருடைய உடல் நிலை தேறி வருவதாகவும் அவர்கள் கூறினர்.
அடுத்தடுத்து மூன்று நாட்களில் ஜெயலலிதாவைச் சந்தித்து மனு கொடுக்க வந்தவர்களுக்கு ஏற்பட்ட கதியால்கோட்டையே வெலவெலத்துப் போயுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications