அரிசிக்கு வரி வசூலிக்கும் ஒரே அரசு ஜெ. அரசுதான்: கருணாநிதி கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக வரலாற்றிலேயே இது வரை எந்த அரசும் அரிசிக்கு வரி விதித்ததில்லை என்று திமுக தலைவர் கருணாநிதிகூறினார்.

இது குறித்து சென்னையில் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக வரலாற்றிலேயே இதற்கு முன் உள்ள எந்த ஒரு அரசும் அரிசிக்கு வரி விதித்ததில்லை. திமுக ஆட்சிக்காலத்தில் அரிசிக்கு வரி விலக்குதான் அளிக்கப்பட்டதே தவிர, வரி விதிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்கூடஅரிசிக்கு வரி விதிக்கப்பட்டதாக வரலாறு இல்லை.

தமிழகத்தை முதன்மையான மாநிலமாக உயர்த்துவோம் என்று கூறினார் ஜெயலலிதா. முதல் நடவடிக்கையாகஅரிசி விலையை உயர்த்தியுள்ளார். இன்னும் என்னவெல்லாம் உயருமோ?

விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் தாய்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குவைத் பெண்ணை மனிதாபிமான முறையில் இந்திய அரசுநடத்த வேண்டும். அந்த பெண்ணின் வாழ்க்கையை கருதி அவரை குவைத்துக்கு அனுப்பக் கூடாது என்றுகருணாநிதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+