ஒப்பந்தத்தை மீறுவதாக புலிகள் மீது மீண்டும் புகார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள கிழக்கு இலங்கையில் ஆயுதம் ஏந்திய 300விடுதலைப்புலிகள் நுழைந்துள்ளதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ராணுவத்தின் கைப்பிடியில் உள்ள பகுதிகளில் அரசியல்அலுவலகங்களை திறப்பதற்காக ஒரு மாத காலத்தில் 50 விடுதலைப்புலிகள் மட்டும் வரலாம் என்றுகூறப்பட்டுள்ளது.

ஆனால் மிஷின் கன்கள், ராக்கெட் லாஞ்சர்களுடன் மட்டக்களப்பு பகுதியில் உள்ள கதிரவேலி என்ற பகுதிக்குள்கடந்த சனிக்கிழமை 300 விடுதலைப்புலிகள் நுழைந்துள்ளனர் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு முன்பே ஆட்களைக் கடத்துதல், ஆயுதங்களைக் கடத்துதல், பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில்விடுதலைப்புலிகள் ஈடுபட்டதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் விடுதலைப்புலிகள்ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக மீண்டும் இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.

வீரசிங்கம் என்பவர் தலைமையில் அந்த 300 புலிகளும் கதிரவேலியில் நடக்கும் ஒரு விழாவுக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் இரு நாட்களில் அவர்கள் திரும்பி விடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த 300 பேரில் 4 பெண் புலிகள் உட்பட பெரும்பாலும் 12 வயதிலிருந்து 16 வயதுக்குட்பட்டவர்கள்தான் என்றுகூறிய இலங்கை அரசு, தங்களையும் மீறி அவர்கள் மதிக்காமல் சென்று விட்டதாகக் கூறியது.

இதுகுறித்து நார்வே கண்காணிப்புக் குழுவினரிடம் இலங்கை அரசு புகார் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே கிழக்கு இலங்கை பகுதியில் உள்ள தமிழர்களை இலங்கை ராணுவம் தொந்தரவு செய்வதாக வந்தசெய்தியை அடுத்தே விடுதலைப்புலிகள் அத்துமீறியதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

இந்நிலையில் வவுனியாவில் தங்களுடைய அலுவலகத்தை விடுதலைப்புலிகள் திறந்த அதே நேரம், அங்கு நார்வேகுழுவினரும் தங்கள் அலுவலகத்தைத் திறந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+