அராபத்தின் கடிதத்துடன் சிறப்புத் தூதர் இந்தியா வந்தார்
டெல்லி:
இஸ்ரேலியப் படைகளால் ராமலா நகரில் முற்றுகையிடப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனஅதிபர் யாசர் அராபத்தின் சிறப்புத் தூதர் இன்று இந்தியா வந்தார்.
அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ள இஸ்ரேல் அரசு அவர் விரும்பினால் ரமலா நகரைவிட்டு வெளியேறலாம்,ஆனால் மீண்டும் பாலஸ்தீனக்குத்துள் வரக் கூடாது என்று கூறியுள்ளது.
இதை அராபத் நிராகரித்துவிட்டார். பாலஸ்தீன நகர்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் முதலில் வெளியேறவேண்டும் என்று கூறியுள்ள அவர், வீர மரணம் அடைவேனே தவிர இஸ்ரேலிடம் நான் சரணடைய மாட்டேன்என்று கூறிவிட்டார்.
கடந்த பல நாட்களாக அவர் ஒரு வீட்டுக்குள் அடைபட்டுள்ளார். அந்த வீட்டில் தொலைபேசி, மின்சாரம், குடிநீர்இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவர் அந்த வீட்டிலேயே தங்கியிருக்கிறார்.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவைக் கோரி தனது சிறப்புத் தூதராக ஹனிப்-அல்-ஹசன்என்பவரை அராபத் அனுப்பி வைத்துள்ளார்.
அவர் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். அராபத் கொடுத்தனுப்பியகடிதத்தை அவர் சோனியாவிடம் கொடுத்தார்.
பின்னர் அவர் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவைச் சந்தித்தார்.
இன்று அவர் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து அராபத்தின் கடிதத்தை வழங்குவார்.
இந் நிலையில் பாலஸ்தீன நகரங்களை விட்டு இஸ்ரேல் ராணுவம் விரைவில் வெளியேறிவிடும் என இஸ்ரேலைபின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications