காதலியையே விலை மாதாக்கிய கொடூரன்

Subscribe to Oneindia Tamil

ஆத்தூர்:

தன் காதலியையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அவரது வாழ்க்கையைக் கெடுத்துள்ளா ஒரு வாலிபர்.

இந்தப் பெண் மறைந்த முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகள் ஆவார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் முகம்மது ஹனிபா. இவர்சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட இவர் பெரிய அளவில் சொத்துஎதையும் சேர்க்கவில்லை. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பென்சனில் வாழ்க்கைய நடத்திக்கொண்டிருந்தார்.

இவரது மனைவி அப்ஷத் ஆயிஷா. இவர்களின் மகள்கள் ஜைனத், கதீஜா (வயது 21).

சில ஆண்டுகளுக்கு முன் ஹனிபா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, இரண்டு மகள்களுடன் கணவரின் அரைபென்சனில் வசித்து வந்தார் ஆயிஷா. கணவர் இறந்தபோது கிடைத்த அரசின் உதவிப் பணத்தை வைத்துஜைனத்துக்கு திருமணம் செய்து வைத்தார். மகள் கதீஜாவுடன் வசித்து வந்தார்.

சமீபத்தில் தாயாரும் இறந்துபோனார். இதனால், கதீஜா அனாதையானார். தனது சகோதரி உள்பட உறவினர்கள்யாரும் தனக்கு ஆதரவளிக்காததால் தனியாக வாழ்ந்து வந்தார்.

அப்போது மணி என்பவன் இவருக்கு அறிமுகமானார். கதீஜாவை காதலிப்பது போல மணி நடித்தார். இதையடுத்துபெற்றோர் விட்டுச் சென்ற சொற்ப சொத்தையும் விற்று அந்தப் பணத்தை பிசினஸ் தொடங்க மணிக்குக்கொடுத்தார்.

ஆனாலும் திருமணம் செய்யாமல் மணி காலம் கடத்தி வந்தார்.

இந் நிலையில் கதீஜாவை வைத்து பணம் பண்ண நினைத்த மணி அவரை தனது நண்பர்களுக்கு இரையாக்கினார்.முதலில் மயக்க மருந்து கொடுத்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் மணி.

இது தொடர்ந்தது. பின்னர் வெளிப்படையாகவே அவரை மணி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினான். இதையடுத்துஅவனிடமிருந்து தப்ப கதீஜா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. முழு நேர விலை மாதாகவே அவரை மணிமாற்றினார்.

ஒரு கட்டத்துக்கு மேல் அதைப் பொறுக்க முடியாத கதீஜா அவரிமிருந்து தப்பி உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுகதவைத் தட்டினார். ஆனால், அனைவரும் அவரை விரட்டியடித்தனர்.

இதையடுத்து சேலம் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகேஸ்வரியின் காலில் விழுந்தார் கதீஜா.அவரது நிலையைக் கேட்டு ஆடிப்போன மல்லிகேஸ்வரி உடனடியாக இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தார்.

மணி விரைவில் கைதாகலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+