ஸ்டாலின் பதவிக்கு வருகிறது வேட்டு
சென்னை:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் இருப்பவர்கள் ஒரே நேரத்தில் ஒரு பதவியில் மட்டுமே இருக்கலாம்என்ற சட்டத்தைக் கொண்டு வர ஜெயலலிதா அரசு திட்டமிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினைக் குறி வைத்து இச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
ஸ்டாலின் தான் எம்.எல்.ஏவாகவும் உள்ளார். அதே நேரத்தில் சென்னை நகர மேயராகவும் இருக்கிறார். இருபதவிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளாகும்.
இச் சட்டம் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என முதல்வர் ஜெயலலிதா இன்றுஅறிவித்தார்.
சட்டசபையில் ஜெ.-ஸ்டாலின் மோதல்:
முன்னதாக இன்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவும் ஸ்டாலினும் கடும வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.விவாத விவரம்:
ஸ்டாலின்: மேயர் பதவிக்கான மரியாதையை தர மாநில அரசு தவறிவிட்டது. மாநகராட்சியின் சட்டதிட்டங்களைக் கூட மாநில அரசு மதிப்பதில்லை. துணை மேயராக (கராத்தே தியாகராஜன்) இருப்பவர் மேயரின்கொடியை காரில் கட்டிக் கொண்டு சுற்றுகிறார். இதை அரசு சும்மா பாரித்துக் கொண்டிருக்கிறது. மரபுகள்மீறப்படுகின்றன. 1937ம் ஆண்டு மாநகராட்சித் தீர்மானத்தின்படி மேயர் மட்டும் தான் அந்தக் கொடியைபயன்படுத்த முடியும்.
ஜெயலலிதா (இடைமறித்து): மரபுகள் குறித்து ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், அவர் மரபுகளைப்பின்பற்றுகிறாரா? நான் முதல்வரான பின்னர் மேயர் என்ற முறையில் ஒரு மரியாதைக்காகவாவது அவர் என்னைவந்து பார்த்தாரா?
ஸ்டாலின்: நான் நாளைக்குக் கூட வந்து பார்க்கத் தயார். ஆனால், நான் அனுப்பும் எந்தக் கடிதத்துக்கும்மாநில அரசு அதிகாரிகளிடமிருந்து பதில் வருவதில்லை. உங்களை சந்திக்க நேரம் கேட்டு உங்கள்அலுவலக அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினாலும் பதில் வராது என்று நினைத்தேன். அதனால் தான் நான்அதற்கு முயற்சிக்கவில்லை.
ஜெயலலிதா: நான் கூடத் தான் பல்வேறு கோரிக்கைகளை வைத்து பிரதமருக்கு பல முறை கடிதம் எழுதுகிறேன். அவரிடமிருந்து எந்தப் பதிலும்வருவதில்லை. அதற்காக நான் டெல்லி செல்லும்போது அவரைச் சந்திக்காமல் திரும்புவதில்லை.
இப்போது ஸ்டாலின் ஒரு முடிவுக்கு வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படவுள்ளார். மேயர் பதவியா? எம்.எல்.ஏ. பதவியா என்பதை அவர் முடிவு செய்ய வேண்டியகாலம் வந்துவிட்டது. இது தொடர்பான சட்டம் இந்தக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என்றார்.
இதனால் தனது எம்.எல்.ஏ. பதவி அல்லது மேயர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்.
சமீப காலமாக எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகனுக்கு மிக அதிக மரியாதை தந்து வருகிறார் ஜெயலலிதா. அன்பழகனின் பல கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறார். அரசுக்கு எதிரான கருத்துத் தெரிவிப்பதில் அன்பழகன் அமைதி காப்பதாக நினைக்கும் கருணாநிதி, இப்போதெல்லாம் ஸ்டாலின்மூலமாகத் தான் சட்டசபையில் எம்.எல்.ஏக்களை இயக்கி வருகிறார்.
இதனால் தான் சட்டசபை விவாதங்களில் இப்போது மிகவும் பரபரப்பு காணப்படுகிறது.
இதையடுத்து ஸ்டாலினுக்குக் கட்டம் கட்ட ஜெயலலிதா தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. புதிய சட்டம் மூலம் அவரை நெருக்கினால் மேயர்பதவிக்குப் பதிலாக எம்.எல்.ஏ. பதவியைத் தான் அவர் துறப்பார் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.
இதன்மூலம் சட்டசபையில் ஸ்டாலின் இல்லாத திமுக களையிழக்கும் என ஜெயலலிதா நினைைக்கிறார்.












Click it and Unblock the Notifications