சூளூர் அருகே கார்-லாரி மோதி 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சூளூர்:
சூளூர் அருகே காரும் லாரியும் இன்று (வியாழக்கிழமை) மாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில்பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோயம்புத்தூரிலிருந்து ஒரு காரில் 6 பேர் கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கல் ஏற்றிக் கொண்டு எதிர்த் திசையில் ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது.
சூளூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மிகப் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
காரிலிருந்த மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications