அன்பழகன் மீதான வழக்கு: லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவியிடம் கல்வி இயக்குநர் ரூ.1.5 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள்கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு எதிரான புகாரை மூன்று மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு லஞ்சஒழிப்பு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கோகுல கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

என் மருமகள் ரேணுகா தேவி ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்காக கடந்த 1999ம் ஆண்டுவிண்ணப்பித்தார்.

ரேணுகா தேவியின் தாத்தா சுதந்தரப் போராட்ட வீரர் என்பதன் அடிப்படையில், அவர் அதற்கான இட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்திருந்தார்.

பிளஸ் டூ தேர்வில் 1,034 மதிப்பெண்கள் பெற்றிருந்த ரேணுகா தேவியிடம் ரூ.1.5 லட்சம் லஞ்மாகத் தரும்படி கல்விஇயக்குநர் கண்ணன் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக நான் (அப்போதைய) கல்வி அமைச்சர் அன்பழகனைச் சந்தித்தபோது, தொகையைக் குறைக்கச்சொல்வதாகக் கூறினார்.

இதற்கிடையே போலியான சான்றிதழ்களுடன் விண்ணப்பித்த சுதா என்ற தகுதியில்லாத மாணவிக்கு அந்த இடம்வழங்கப்பட்டு விட்டது.

இந்த முறைகேட்டில் அன்பழகனுக்கும் பங்கு உண்டு. இதுகுறித்து கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதிபுகார் கொடுத்தேன். பின்னர் 2001ம் ஆண்டு முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக் குமாரின் முன்பும் புகார் மனுதாக்கல் செய்தேன்.

ஏற்கனவே நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டும், அவர்கள்இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்யவில்லை.

எனவே இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கோ அல்லது சி.பி.ஐ. போலீசாருக்கோ மாற்றி உத்தரவிடவேண்டும் என்று கோகுல கிருஷ்ணன் அம்மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, மனுதாரர் கொடுத்த புகார் குறித்து விசாரித்து மூன்று மாதகாலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+