பாலஸ்தீனத்தைச் சுற்றி வளைக்கும் இஸ்ரேல் படைகள்
நாப்லஸ்:
பாலஸ்தீனத்தின் மற்றொரு முக்கியமான நகரமான நாப்லசை 200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ராணுவ டாங்கிகள்முற்றுகையிட்டு, அங்கு தொடர்ந்து தீவிரத் தாக்குதலை நடத்தி வருகின்றன.
ஏற்கனவே ராமல்லா நகரைத் தங்களுடைய கைவசத்திற்குக் கொண்டு வந்த இஸ்ரேல் படையினர், பாலஸ்தீனஅதிபர் யாசர் அராபத்தை வீட்டுக் காவலில் பிடித்து வைத்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தக் கோரி பாலஸ்தீன அரசு பல்வேறு நாடுகளிடமும் கோரிக்கைகளை விடுத்துவருகிறது.
அராபத்தின் சிறப்புத் தூதராக ஹனிப்-அல்-ஹசன் என்பவரும் இந்தியாவுக்கு வந்து வாஜ்பாயிடம் இதுதொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே நாப்லஸ் நகரைச் சுற்றி வளைத்த இஸ்ரேல் படையினர், அங்கு தீவிரத் தாக்குதலைத்தொடங்கியுள்ளனர். இந்தத் தாக்குதலின்போது ஏற்பட்ட ஒரு குண்டு வெடிப்பில் சாதிக்கா ஒகாஷா என்ற 54வயதுப் பெண் கொல்லப்பட்டார்.
சுமார் 200 இஸ்ரேல் டாங்கிகள், வெறிச்சோடிக் கிடக்கும் நாப்லஸ் நகர் முழுவதையும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
இதற்கிடையே சுமார் 1,100 பாலஸ்தீனர்களை தாங்கள் கைது செய்திருப்பதாக இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications