மே 2ல் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சர்வதேச தமிழ் ஒருங்கிணைப்பு கழகம் சார்பில் நடத்தப்படும் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் மே 2ம்தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தமிழ் ஒருங்கிணைப்பு கழகத்தின் நிறுவனரும், செயலாளருமான டாக்டர் வி.எம். சேதுராமன் மதுரையில்செய்தியாளர்களிடம் பேசுகையில்,

1977ம் ஆண்டு இந்தக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு முதல் மாநாடு திருச்சியிலும் அடுத்த மாநாடுசென்னையிலும் நடந்தன. மூன்றாவது மாநாடு ஜெர்மனியிலும், 4-வது பாங்காக்கிலும் நடந்தன.

அந்த வரிசையில் இப்போது ஐந்தாவது மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது.

மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தமிழ் மொழி மற்றும் தமிழர்களை மாற்றுவது என்ற நோக்கத்தை அடிப்படையாகவைத்து மதுரை மாநாடு நடைபெறும். நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநதி இவ்விழாவில் பாராட்டப்படுகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர்முரசொலி மாறன், பழ.நெடுமாறன், ப.சிதம்பரம், வைகோ, இளங்கோவன், பிடிஆர் பழனிவேல்ராஜன்,வலம்புரிஜான், குமரி அனந்தன், திருமாவளவன் உள்ளிட்ட பலருக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்புஅனுப்பப்படும் என்றார் சேதுராமன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+