கிரிக்கெட் விளையாட இந்தியா பயப்படுகிறதா? - முஷாரப்புக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
திருச்சி:
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட இந்தியா பயப்படுவதாக அந்நாட்டு அதிபர் முஷாரப் கூறியுள்ள கருத்துக்குமத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம்தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் எப்போதுமே தயாராகத்தான் உள்ளது. ஆனால் இந்தியாதான் பயந்துகொண்டு பாகிஸ்தானுடன் விளையாட மறுத்து வருகிறது என்று சமீபத்தில் முஷாரப் கூறியிருந்தார்.
இதுபோன்ற கருத்துக்கள் அவரது பதவிக்கு உகந்ததல்ல. இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களைவெளியிடுவதை முஷாரப் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பொடோ சட்டத்தை சில மாநில அரசுகள் நறைவேற்றப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. இந்த முடிவைஅந்த மாநிலங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். தீவீரவாதத்தை ஒழித்துக் கட்ட பொடோ சட்டம் மிகவும்அவசியமானது.
இந்தச் சட்டத்தை காங்கிரஸ் ஆட்சி புரியும் கர்நாடகம் ஏற்றுக் கொண்டுள்ளதை மற்ற காங்கிரஸ் மாநில அரசுகளும்எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications