"தீவிரவாதத்தின் நிறம் சிகப்பு": ஜார்ஜுக்கு வந்த "பேக்ஸ்"
டெல்லி:
பாதுகாப்புத்துறை அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு கொலை மிரட்டல் "பேக்ஸ்" வந்ததையடுத்து, அவருக்குபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெர்னாண்டசுக்கு சமீபத்தில் ஒரு "பேக்ஸ்" வந்தது. "பயங்கரவாதத்தின் நிறம் சிகப்பு" என்ற தகவலுடன் வந்த அந்த"பேக்ஸ்" கடிதத்தில் அனுப்புநர் முகவரி குறிப்பிடப்படவில்லை.
டெல்லிக்குள்ளேயே உள்ள ஏதோ ஒரு பப்ளிக் பூத் மூலமாகத்தான் இந்த "பேக்ஸ்" அனுப்பப்பட்டிருப்பதாகபாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சமீபத்தில் காஷ்மீர் எல்லையில் உள்ள ராணுவ உளவுத் துறையினர் ஒரு வயர்லெஸ் தகவலைஇடைமறித்துக் கேட்டபோதும், பெர்னாண்டசை தற்கொலைப் படை மூலம் கொலை செய்வதற்கு சிலபயங்கரவாதிகள் சதி செய்திருப்பது தெரிய வந்தது.
இந்த "பேக்ஸ்" மிரட்டல் மற்றும் வயர்லெஸ் தகவல் ஆகியவற்றைத் தொடர்ந்து பெர்னாண்டசுக்குப் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. அவரும் இந்தக் கூடுதல் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டார்.
அமைச்சராகப் பதவியேற்ற காலத்திலிருந்தே தனக்குப் பாதுகாப்பே தேவையில்லை என்று கூறி வந்தபெர்னாண்டஸ், கடந்த செப்டம்பர் 11 அமெரிக்க தாக்குதல் மற்றும் டிசம்பர் 13 நாடாளுமன்றத் தாக்குதல்ஆகியவற்றுக்குப் பிறகு இதுபோன்ற பாதுகாப்புக்களை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications