காஞ்சி சுவாமிகளுக்கு "இசட்" பிரிவு பாதுகாப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு "இசட்" பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சனை தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டதலைவர்களிடமும் மதத் தலைவர்களிடமும் பேச்சு நடத்தியவர் காஞ்சி சுவாமிகள்.
இந்நிலையில் காஞ்சி சுவாமிகளுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து அவருக்குப் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்து, அவருக்கு "இசட்" பிரிவுபாதுகாப்பை வழங்கியுள்ளது.
அதன்படி கமாண்டோ பிரிவைச் சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஏட்டு மற்றும் 3 போலீசார், காஞ்சிசுவாமிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள்.
அவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்திய இந்தப் போலீசாரும்பாதுகாப்புக்காக செல்வார்கள்.
காஞ்சி காமகோடி பீடத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டரால் சோதனை செய்யப்பட்டபிறகே, பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications