தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலைகள்
சென்னை:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து வருவதாகவும், கொலைகள் அதிகரித்து வருவதாகவும் பாட்டாளி மக்கள்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சட்டசபையில் அக் கட்சியின் எம்.எல்.ஏ. மணி இன்று இந்தக் குற்றச்சாட்டைக் கூறினார். பட்டப் பகலில்கொள்ளைகளும் அதிகரித்துவிட்டதாகவும்,
சட்டம்-ஒழுங்கு நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தீவிர நடவடிக்கை எடுக்குமாறுபோலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை வட பழனி பகுதியில் ஆசிரியையின் மகள் சுமதி பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமதியின் குடும்பத்தினர், அவரது முன்னாள் கணவர் ஆகியோரிடமும் விசாரணை நடந்து வருகிறது. விரைவில்குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.
எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடைபெறாதவண்ணம் கடும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை நகரகாவல்துறை கமிஷனர் விஜயக்குமாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
அதே போல சர்ச் ஒன்றில் நுழைந்து உண்டியலை உடைத்து ரூ. 15,000த்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியகும்பலைப் பிடிக்கவும் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.
நேற்று முன் தினம் வடபழனியில் பட்டப் பகலில் நடந்த சுமதியின் (வயது 28) கொலை சென்னையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். ஒரு தனியார் நிறுவனத்திலும்பணியாற்றி வந்தார்.












Click it and Unblock the Notifications