இனி "புளிச்" செய்தால், புகை விட்டால் 3 மாதம் ஜெயில்
சென்னை:
ரோட்டில் நடந்து சென்று கொண்டே இருப்பார்கள். திடீரென உதடுகளுக்கு நீள வாக்கில் மூக்குக்கு நேராக இரண்டுவிரல்களை வைப்பார்கள். உள்ளேயிருந்து புல் போர்சில் இரு விரல்களுக்கு இடையே எச்சிலை புளிச்செய்வார்கள். எச்சில் எவ்வளவு தூரம் பாய்ந்திருக்கிறதோ அவ்வளவுக்கு சந்தோஷப்பட்டுக் கொண்டு தொடர்ந்துநடந்து கொண்டிருப்பார்கள்.
அதிலும் புகையிலை, பான்பராக், பாக்கு போடுவர்களுக்கு எச்சில் துப்புவது என்பது மூச்சுவிடுவது மாதிரிஆகிவிட்டது.
ஆஸ்துமாகாரர்கள் துப்பும் எச்சில் மூலமாக ஆயிரக்கணக்கணோர் தினந்தோறும் டி.பிக்கு ஆளாகி வருகின்றனர்.
இது தவிர சண்டை வந்தால் கையால் அடித்துக் கொள்வதை விட காறி உமிழ்வது நம் ஊர் பெண்களின் டிபன்ஸ்ஸ்ட்ராடிஜிகளில் ஒன்று.
எச்சில் துப்புவது அநாகரீகம் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களைப் போன்றவர்களுக்கு பாடம்புகட்ட புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. எச்சில் துப்புவதைத் தடுக்க புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொது இடங்களில் புகை பிடிப்பது, புகையிலை, பான் மசாலா, குட்கா போன்றவற்றை மென்று துப்புவதுஆகியவற்றுக்குத் தடை விதிக்கும் சட்டம் இன்று (வியாழக்கிழமை) தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். அதன்படி பொது இடங்களானமருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், விமான நிலையங்கள், நீதிமன்றங்கள், பஸ் நிலையங்கள், தியேட்டர்கள்,பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிப்பது, எச்சில் துப்புவது, பாக்கை மென்று அதன் சாற்றைத்துப்புவது, பான் பராக் போடுவது ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்படும்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் பொது இடங்களில் புகை பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. அதே போல்புகையிலை, பான் மசாலா மற்றும் குட்கா ஆகியவற்றைப் விற்பதற்கும் உபயோகிப்பதற்கும் கூட கடந்த ஜனவரியில்தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடைகளுக்கான சட்டம் இன்று தமிழக சட்டசபையில் நிறைவேறியது.
இந்தச் சட்டத்தின்படி, தடையை மீறுபவர்களுக்கு முதற்கட்ட தண்டனையாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
இரண்டாவது முறையாக அதே நபர் மீண்டும் பிடிபட்டால், மீண்டும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம்விதிக்கப்படுவதோடு, அவருக்கு 3 மாதம் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று இந்தச் சட்டம்கூறுகிறது.
மசோதவைத் தாக்கல் செய்து அமைச்சர் செம்மலை பேசுகையில், புகை பிடிப்பதால் அவர்களுக்கும், அவர்கள்விடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் புற்றுநோய் வருகிறது. பொது இடங்களில் பாக்கை மென்று அதன்சாற்றையும், எச்சிலையும் துப்புவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications