தாமரைக்கனிக்கு நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை:
போலீசாரின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான தாமரைக்கனிக்குரூ.3,500 நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, தமிழகம் முழுவதிலும் அக்கட்சியின் முக்கியப்பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனியையும் போலீசார் அடித்து உதைத்து இழுத்துச் சென்று போலீஸ்வேனில் ஏற்றினர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் ஆகியோர் மிருகத்தனமாகத்தாக்கியதில் தாமரைக்கனியின் இடது கால் எலும்பு முறிந்தது. மேலும் உடலின் பல பாகங்களில் பயங்கரமானகாயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து தமிழக மனித உரிமைக் கமிஷனில் தாமரைக்கனி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்தநீதிபதிகளான சாமிதுரை மற்றும் சம்பந்தம் ஆகியோர் நேற்று தீர்ப்பு வழங்கினர்.
பாதிக்கப்பட்ட தாமரைக்கனிக்கு ரூ.3,500 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உள்துறைச் செயலாளர் நரேஷ்குப்தாவுக்கு நீதிபதிகள் இருவரும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications