முஸ்லீம்களைத் தனித்து விட மாட்டோம்: வாஜ்பாய்
அகமதாபாத்:
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் முஸ்லீம்களை நாங்கள் தனியாகத் தவிக்க விட்டுவிட மாட்டோம், நாடேஅவர்களின் பின்னால் திரண்டு நிற்கிறது என்றும் வாஜ்பாய் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
குஜராத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் வாஜ்பாய் இன்று காலைஅகமதாபாத் வந்து சேர்ந்தார்.
இங்கிருந்து நேரடியாக கோத்ரா கிளம்பிய வாஜ்பாய், அங்குள்ள ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில்எரிக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டார்.
இந்த ரயிலில் பயணம் செய்த ராம கர சேவகர்களில் 58 (இன்று ஒருவர் உயிரிழந்தார், ஆக 59) பேர் உயிருடன்எரித்துக் கொல்லப்பட்ட கோத்ரா ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தைப் பார்த்த வாஜ்பாய், சிறிது கண்கலங்கினார்.
அதன் பின்னர் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று, வன்முறையால்பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வாஜ்பாய் ஆறுதல் கூறினார். இந்த முகாம்களில் சுமார் 10,800 முஸ்லீம்கள்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட அந்த முஸ்லீம்களிடையே பேசிய வாஜ்பாய், இந்த நெருக்கடியான சூழ்நிலையில் முஸ்லீம்களைஅரசு தனித்து விட்டு விடாது என்றும் எப்போதும் அவர்களுக்குத் துணையாக நாடே பின்னால் திரண்டுள்ளதுஎன்றும் கூறினார்.
மனிதர்களை மனிதர்களே எரித்துக் கொன்றிருக்கும் இந்தக் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது என்று கூறிய வாஜ்பாய், இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் போது நான் எப்படி வெளிநாட்டுத்தலைவர்களின் முகத்தில் விழிப்பது என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.
இன்று மாலை குஜராத் ஆளுநர் பண்டாரி, முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்து,குஜராத் வன்முறைகள் குறித்து வாஜ்பாய் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சர் சி.பி. தாக்கூர், சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட அமைச்சர்களும்வாஜ்பாயுடன் குஜராத்திற்கு வந்துள்ளனர்.
இதற்கிடையே ஒரு பக்கம் விமானத்தில் வந்து வாஜ்பாய் இறங்கிக் கொண்டிருக்க, அகமதாபாத்தின் மறுபுறத்தில்வன்முறை தொடர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருந்தது. கடந்த 48 மணி நேரத்தில் இப்பகுதிகளில் நடந்தவன்முறைச் சம்பவங்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications