தலித் பஞ்சாயத்து தேர்தல்: திருமாவளவன் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தலித் பஞ்சாயத்து தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் தலைவர் திருமாவளவன், இன்று (வியாழக்கிழமை) தமிழக சட்டசபையிலிருந்து வெளிநடப்புசெய்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள தலித் பஞ்சாயத்துத் தொகுதிகளான பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டார்மங்கலம்ஆகிய இடங்களில் வரும் 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் ஜாதியினரின் அச்சுறுத்தல் காரணமாக இவற்றில் நாட்டார்மங்கலம் தொகுதியில் கடைசித் தேதி வரை யாருமேமனுத் தாக்கல் செய்யவில்லை. மற்ற இரு தொகுதிகளிலும் சேர்ந்து ஆறு பேர் மட்டும் மனு செய்துள்ளனர்.

இந்நிலையில் இத்தொகுதிகளில் உள்ள வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார் திருமாவளவன்.

ஆனால் திருமாவளவனுடைய இந்தக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள சபாநாயகர் காளிமுத்து மறுத்துவிட்டார்.

இதைக் கண்டித்து திருமாவளவன் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+