மதுரையில் 3 மாசத்துக்கு தண்ணீர் பஞ்சம் கிடையாதாம் !
சென்னை:
மதுரை மாநகரில் அடுத்த 3 மாதத்திற்கு குடிநீர்ப் பஞ்சம் ஏற்படாது என்றும் அதற்குப் போதுமான குடிநீர் இருப்பில்உள்ளதாகவும் மதுரை மாநகர மேயர் செ. ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மதுரை அருகே பண்ணைப்பட்டி என்ற இடத்தில் ரூ.45 கோடி செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர் சுத்திரிகப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீர்தான் மதுரை நகருக்கு விநியோகம் செய்யப்படஉள்ளது. இந்த நிலையத்தை சுற்றிப் பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் ராமச்சந்திரன் பேசுகையில்,
மதுரை நகரில் அடுத்த மூன்று மாதத்திற்குத் தேவையான குடிநீர் இருப்பு உள்ளது. எனவே மூன்று மாதத்திற்குகுடிநீர் குறித்த பயம் தேவையில்லை. கோடை மழை நன்கு பெய்தால் குடிநீர் விநியோகம் மேலும் சீர்படும்.
சுமார் ரூ.45 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மற்றொரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்குத்தேவையான நிதி உதவியை செய்யுமாறு உலக வங்கியிடம் கோரியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications