தொடர்கிறது ஆணையரின் லீவ்: சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி ஆணையரான ராமநாதன் தொடர்ந்து மருத்துவ விடுப்பில் இருந்து வருவதால் மாநகராட்சிப்பணிகள் தேக்கமடைந்துள்ளன.

கடந்த ஏழு மாதங்களில் சென்னை மாநகராட்சிக்கு ஐந்து ஆணையர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். கடைசியாகநியமிக்கப்பட்டவர் ராமநாதன். ஆனால் ஜனவரியில் ஆணையராக நியமிக்கப்பட்ட அவர் பிப்ரவரி முதல் மருத்துவவிடுப்பில் சென்று விட்டார்.

மருத்துவ விடுப்பு முடிந்த நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு கேட்டு ராமநாதன் விண்ணப்பித்துள்ளதாகத்தெரிகிறது.

ஸ்டாலின் கொடுத்த "பிரஷர்" காரணமாகவே ராமநாதன் லீவில் போய் விட்டதாக சமீபத்தில் சட்டசபையில் முதல்வர்ஜெயலலிதா தெரிவித்தார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே ராமநாதன் மருத்துவ விடுப்பைநீட்டித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தற்போது மேயரிடம் உள்ள நிதி ஒதுக்கீடு அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் ஆணையரிடம்வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆணையர் இல்லாமல் ஒரு திட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே ராமநாதனைதொடர்ந்து பணிக்கு வரச் செய்ய வேண்டும். இல்லையென்றால், புதிய ஆணையரை நியமிக்க வேண்டும் என்றகருத்து பல்வேறு கவுன்சிலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திமுக ஆட்சிக்காலம் முடியும்போது மாநகராட்சி ஆணையராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். அதிமுக பதவிக்குவந்தவுடன் அவர் மாற்றப்பட்டு சண்முகராஜேஸ்வரன் என்பவர் புதியஆணையராக நியமிக்கப்பட்டார். ஆனால்அவரும் உடனடியாக மாற்றப்பட்டு ஆச்சார்யலு அந்தப் பொறுப்புக்கு வந்தார்.

ஆச்சார்யலு வந்த பிறகு அவர் கொடுத்த புகாரின் பேரில்தான் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர்கைது செய்யப்பட்டனர். இந்தப் பிரச்சினை பெரிய அளவில் வெடிக்கவே ஆச்சார்யலு மாற்றப்பட்டார்.

அவருக்குப் பதில் சம்பத் புதிய ஆணையரானார். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் போலி வாக்காளர்களை சேர்த்தவிவகாரத்தில் அவரை உடனடியாக வேறு துறைக்கு மாற்றுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிடவே ராமநாதன் புதியஆணையராக நியமிக்கப்பட்டார்.

ராமநாதனும் தற்போது லீவில் போய் விடவே துணை ஆணையரான கார்த்திக்தான் தற்காலிகமாக பொறுப்புகளைப்பார்த்து வருகிறார். இருப்பினும் பல முக்கியக் கோப்புகளில் ஆணையர் மட்டுமே கையெழுத்திட முடியும்என்பதால் மாநகராட்சியில் பல்வேறு பணிகள் தேக்கமடைந்துள்ளன.

அரசுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நடைபெறும் மறைமுகப் போரில் மாநகராட்சிப் பணிகள் பாதிக்கப்படுவதுபொதுமக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+