குஜராத்தில் வன்முறை தொடர்கிறது: ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
பிரதமர் வாஜ்பாய் நேற்று (வியாழக்கிழமை) வந்து சென்ற பிறகும்கூட குஜராத்தில் இன்னும் வன்முறை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
மொடாசா நகரில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் குண்டுபாய்ந்து இறந்தார்.
இதையடுத்து அந்நகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அகமதாபாத்தின் சிலபகுதிகளிலும் வன்முறை தொடர்ந்து கொண்டிருப்பதால் அங்கும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று குஜராத்தில் பயணம் செய்த வாஜ்பாய், வன்முறையில் கொல்லப்பட்டவர்களின்குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications