மதுரை: 2 சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். அவர்களை அரிவாளால் வெட்டி விட்டுத்தப்பிய சக மாணவர்கள் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் சுப்பையா, சிவானந்தம் ஆகிய இருவரையும், அமர்சிங், திணேஷ், பாலமுருகன் மற்றும்ஒரு மாணவர் சேர்ந்து குடிபோதையில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
தங்களைப் பற்றி கல்லூரி முதல்வரிடம் சுப்பையாவும், சிவானந்தமும் புகார் கொடுத்ததால் அவர்களைஇம்மாணவர்கள் வெட்டியதாகத் தெரிகிறது.
ஆபத்தான நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய 4மாணவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications