ஈரோடு அருகே போலீஸ் நிலையம் முற்றுகை: டி.எஸ்.பிக்கு அடி-உதை

Subscribe to Oneindia Tamil

பெருந்துறை:

பெருந்துறை அருகே போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், டி.எஸ்.பியை அடித்து உதைத்துபோலீஸ் ஜீப் ஒன்றையும் அடித்து நொறுக்கினர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது போலநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியப்பன்.

அவருடைய தோட்டத்தில் கள் இறக்கப்படுவது தொடர்பாக வந்த புகாரையடுத்து, சாமியப்பனிடம் திங்களூர்போலீஸ் நிலைய ஏட்டு சுப்பையன் விசாரித்தார்.

அதை சாமியப்பன் மறுத்தும் நம்பாத சுப்பையன், அவரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று அடித்து உதைத்ததாகத் தெரிகிறது. இதனால் ஏற்கனவே குடல்வால் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தசாமியப்பன் சுருண்டு விழுந்து கதறினார்.

இதையடுத்து அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் சாமியப்பனை உடனடியாக கோபிச்செட்டிப்பாளையம் அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இத்தகவலறிந்த போலநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அந்தப்போலீஸ் நிலையம் முன்பாகத் திரண்டனர்.

சாமிநாதனைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மக்கள் கோஷம் எழுப்பஆரம்பித்தனர். இதையடுத்து கோபி துணை போலீஸ் சூப்பரின்டெண்ட் சோமசுந்தரம் அந்த போலீஸ்நிலையத்துக்கு விரைந்தார்.

போலீசாரிடம் விசாரித்து விட்டு வெளியே வந்த சோமசுந்தரம், அங்கு கூடியிருந்த மக்களிடம் "ஏன் இப்படி கூச்சல்போடுகிறீர்கள்?" என்று கேட்டார். இதையடுத்து அவருக்கும் மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்ஏற்பட்டது.

அப்போது மக்களில் ஒருவரை சோமசுந்தரம் அடிக்க முயன்றதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கு கூடியிருந்தமக்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்று கொண்டு அடித்து உதைக்க ஆரம்பித்தனர். இதில் அவருக்குக் காயம்ஏற்பட்டு, சட்டையும் கிழிந்தது.

மேலும் அங்கிருந்த போலீஸ் ஜீப்பையும் அடித்து நொறுக்கி, அதன் டயர்களில் காற்றைப் பிடுங்கி விட்டனர்.

நிலைமை மிகவும் மோசமாகவே, ஈரோடு மாவட்ட சூப்பரின்டெண்ட் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில்நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்களை அந்தப் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால்கூட்டம் சிதறி ஓடியது. அப்போதும் மக்கள் விடாமல் போலீசாரைத் தாக்கினர்.

இச்சம்பவத்தில் சுமார் 10 போலீசார் காயமடைந்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 61 பேரைப் போலீசார்கைது செய்தனர்.

அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அங்கு ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+