12 பெண் குழந்தைகளுக்கு ஜெ. நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 12 பெண் குழந்தைளுக்கு ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 400ரூபாய் நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வழங்கினார்.
அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை பெற்ற பின்னர் குடும்பக் கட்டுப்பாட்டுஅறுவைச் சிகிச்சை செய்து கொண்டால் அந்தப் பெண் குழந்தையின் பெயரில் ரூ.15,200 முதலீடு செய்யப்படும்.
இரண்டு குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால் தலா ரூ.15,200 முதலீடுசெய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 12 பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்பட்ட நிதிக்கான சான்றிதழ்களைமுதல்வர் ஜெயலலிதா தனது அலுவலகத்தில் வைத்து 12 குழந்தைகளின் பெற்றோர்களிடம் வெள்ளிக்கிழமைஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications