ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்: கூத்தாடுகிறது தமிழக பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவிடம் இருந்து விலகிவிட்டதால் தமிழக பா.ஜ.கவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக அக் கட்சியின் மாநிலத்தலைவர் இல. கணேசன் கூறினார்.

பா.ஜ.க. உருவான நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள கட்சியின்தலைமையகமான கமலாலயத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார் கணேசன். இதன் பின்னர் நிருபர்களிடம்பேசுகையில்,

இப்போது தமிழக பா.ஜ.க. மிக சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிம் கேட்டுத்தான் எதையும் செய்ய வேண்டும் என்ற நிலையில் பா.ஜ.க. இப்போது இல்லை.

அதிமுகவுடன் வெறும் நட்பு தான் நீடிக்கிறது. ஒரு தனியார் தொலைபேசி துவக்க நிகழ்ச்சியில் பிரதமர்வாஜ்பாயுடன் ஜெயலலிதா பேசியதை வைத்து இரு கட்சிகளிடையே உறவு வந்துவிட்டதாகக் கருதிவிடவேண்டாம். அதைப் பெரிதாக்க வேண்டியதே இல்லை.

தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை. ஒரு திருமணம், ஒரு தலைவரது இறப்புக்குக் கூடகட்சியின் தலைமையிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தான் செல்ல வேண்டிய நிலையில் தலைவர்களும்தொண்டர்களும் இருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். ஆரோக்கிய அரசியல் வேண்டும்.

ஒருவருக்கு ஒரு பதவி என்ற முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் சரி தான். இதற்காக சட்டம் கொண்டு வருவதும்ஓ.கே. தான். ஆனால், அதை அவர் சட்டசபையில் வெளியிட்ட விதம் தான் சரியில்லை. சட்டசபையில் அவர்வெளியிட்ட விதத்தை வைத்துப் பார்த்தால் இந்தச் சட்டம் ஸ்டாலினின் பதவியைப் பறிக்க வேண்டும் என்ற ஒரேகாரணத்துக்காக கொண்டு வரப்பட்டுள்ளது புரிகிறது.

இந்த விஷயத்தில் ஜெயலலிதா சட்டசபையில் பேசிய தொனி, விதம் ஆகியவை இது ஸ்டாலினுக்கு எதிரான சட்டம்என்பதை புரிய வைக்கிறது. உண்மையிலேயே நல்ல நோக்கத்தோடு இது போன்ற சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவர நினைத்திருந்தால் அவர் ஆட்சிக்கு வரும் முன்பே பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோதேசெய்திருக்கலாம்.

அல்லது தேர்தலுக்கு முன்பு கூட இத் திட்டத்தை வெளியிட்டிருக்கலாம். தேர்தல் அறிக்கையில் கூட இதைச்சேர்த்திருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு சட்டசபையில் ஸ்டாலின் தன்னை எதிர்த்துப் பேசியவுடன்அவருக்கு பதிலளித்த ஜெயலலிதா இந்தச் சட்டம் கொண்டு வரப் போவதாகக் கூறியிருப்பது இது நல்லநோக்கத்துடன் கொண்டு வரப்படவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் நடக்கவுள்ள இடைத் தேர்தல்களில் யாரை நிறுத்துவது என்பது குறித்து மாநில தேர்தல் கமிட்டி முடிவுசெய்யும். எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாததால் நாங்கள் இந்த விஷய்ததில் சுதந்திரமாக முடிவெடுக்கமுடியும் என்றார் கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+