கா.ஜ.பேக்கு திராவிடக் கட்சிகள் பிடிக்காதாம் !
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை இணையாது என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ வள்ளல் பெருமான்கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, காங்கிரஸ்கட்சியுடன் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தவறான செய்தியாகும்.
திராவிடக் கட்சிகளான அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக அறிவித்தால் மட்டுமேகாங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேருவதை விட்டு விட்டு மூன்றாவது அணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கலாம் என்றார்அவர்.
த.மா.கா. எங்களுடன் இணையப் போவதாால், ப.சிதம்பரமும் வெட்டியாய் கட்சி நடத்துவதை விட்டு விட்டு காங்கிரசில்இணைய வேண்டும் என்று அக் கட்சியின் தமிழக விவகாரங்களை கவனித்து வரும் ரமேஷ் சென்னிதலா கூறியிருந்தார்.
இப்போது அவருக்கு இந்தப் பதில் கிடைத்திருக்கிறது.
திராவிடக் கட்சிகள் என்றாலே ஆகாது என்பது போலப் பேசும் ப.சிதம்பரம் கட்சி கடந்த தேர்தலில் திமுகவிடம் தான் 4இடங்களை வாங்கி திமுக நண்பர்கள் அமைப்பு என்ற பெயரில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தனது கட்சியின் பெயரை மாற்றி மாற்றி மாற்றி இப்போது கா.ஜ.பே. (காங்கிரஸ் ஜனநாயக்பேரவை) என்ற பெயரில் கட்சியை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications