தலால் ஆஸ்மிக்கு ஆந்திராவில் ரகசிய திருமணம்
கடப்பா:
குவைத் பெண் தலால் ஆஸ்மிக்கும் அவருடைய காதலர் காதர் பாட்சாவுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம்நடந்து முடிந்தது.
போலி பாஸ்போர்ட் மூலம் தன் காதலனுடன் குவைத்திலிருந்து சென்னை வந்த ஆஸ்மி, போலீசாரிடம் பிடிபட்டுவேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் பல்வேறு தரப்பு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படிஅவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆஸ்மியைச் சந்திப்பதற்காக டெல்லியிலிருந்து குவைத் தூதரக அதிகாரி சென்னை வந்தார். ஆனால்அதற்குள் காதலர்கள் கடப்பாவுக்குச் சென்று விட்டதால், அந்த அதிகாரி ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பினார்.
இதற்கிடையே பாட்சாவின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் டி.வி. பள்ளிக்குச் சென்ற காதலர்கள் இருவரும்,பாட்சாவின் பெற்றோர் ஆசியுடன் அவருடைய 30 உறவினர்கள் புடைசூழ வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொண்டனர்.
சுத்தனபள்ளி என்ற கிராமத்தில் உள்ள மசூதியில் பாட்சா-ஆஸ்மி திருமணம் நடைபெற்றது.
தலால் ஆஸ்மியைக் கண்டுபிடிக்க தமிழக போலீசார் தங்களுக்கு சரியான ஒத்துழைப்புத் தரவில்லை என குவைத்தூதரக அதிகாரி புகார் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
ஜெயலலிதா தலைமையில் தான் தங்கள் திருமணம் நடக்கும் என காதர்பாட்சாவும் தலால் ஆஸ்மியும்கூறியிருந்தனர். இந் நிலையில் அவசர அவசரமாக கடப்பாவில் வைத்து இவர்களுக்கு காதர்பாட்சாவின்உறவினர்கள் திருமணம் முடித்து வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications