தமிழ் எம்.பிக்கள் தன்னைச் சந்திக்க பிரபாகரன் உத்தரவு
கொழும்பு:
நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்களின் செயல்பாடு குறித்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடும்அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்களை நேரில் அழைத்து கடும் எச்சரிக்கை விடுக்கபிரபாகரன் திட்டமிட்டுள்ளார்.
இத் தகவலை புலிகளின் செய்தித் தொடர்பாளரும் அரசியல் ஆலோசகருமான ஆண்டன் பாலசிங்கம் நேற்றுயாழ்பாணத்தில் தெரிவித்தார். பேரணி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:
புலிகளின் ஆதரவுடன் வென்ற தமிழ் எம்.பிக்களின் செயல்பாடு திருப்திகரமானதாக இல்லை. புலிகளால் தான்தமிழர்களைக் காக்க முடியும் என்று பேசி மக்களிடம் ஓட்டு வாங்கி நாடாளுமன்றத்துக்குச் சென்ற பலரும் பிரதமர்மற்றும் அமைச்சர்களில் பின்னால் சுற்றிக் கொண்டுள்ளனர்.
தமிழர் நலனுக்காக அவர்கள் பேசுவதில்லை. நாம் இங்கே அமர்ந்து கொண்டு அவர்களிடம் கோரிக்கை வைத்தால்அவர்கள் காதில் விழப் போவதில்லை. இதனால் தான் பிரபாகரன் அந்த எம்.பிக்களை வன்னிக்கு அழைத்துவருமாறு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களையெல்லாம் ஒரு தலைமையின் கீழ் கொண்டு வந்தாக வேண்டும். நாடாளுமன்றத்தில்இருக்கும் தமிழ் எம்.பிக்களுக்கு நமது கொள்கைகள் குறித்து விளக்கப்படும், எப்படிச் செயல்பட வேண்டும்என்பது குறித்து சொல்லித் தரப்படும். தமிழ் எம்.பிக்களை வழி நடத்த வேண்டியது தலைமையின் (புலிகளின்)கடமை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் என்றார் பாலசிங்கம்.
தமிழ் எம்.பிக்களுக்கு புலிகள் விடுக்கும் இரண்டாவது கடும் எச்சரிக்கை இதுவாகும். முன்பு லண்டனில் இருந்தபாலசிங்கம் கூறுகையில், புலிகளின் பெயரைச் சொல்லி தேர்தலில் வென்றவர்கள் தமிழர் நலனை விட்டுவிட்டு,நமது கொள்கைகளை விட்டுவிட்டு வேறு வேலைகளைச் செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கு சாவு நிச்சயம்என்று எச்சரித்திருந்தார்.
இப்போது அவர்களை நேரில் வன்னி பகுதிக்கே கொண்டு வந்து எச்சரிக்க பிரபாகரன் முடிவு செய்துள்ளார்.
வன்னி பகுதியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தமிழ் தேசியவாதக் கூட்டணியைச் சேர்ந்த 15எம்.பிக்களுக்கும் புலிகள் அழைப்பு அனுப்பியுள்ளனர்.அனைவரும் தங்களுக்கு அழைப்பு வந்துள்ளதை உறுதிசெய்துள்ளனர்.
12ம் தேதி இக் கூட்டம் நடக்கவுள்ளது. இதனால், இந்த எம்.பிக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருப்பதாகக்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications