திருச்செந்தூர் அருகே வீட்டுக் கதவை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே ஒரு வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றவர்களைப்போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஒருகொள்ளைக் கும்பல் புகுந்தது.
அந்த வீட்டின் கதவை கடப்பாறைக் கம்பியால் உடைத்துப் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 40 பவுன் தங்கநகை மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
இன்று காலை வீடு திரும்பிய வீட்டின் சொந்தக்காரர் நகைகள், பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டள்ளதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications