இங்கே பிக்பாக்கெட் அடிக்க பயிற்சி தரப்படும் !!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வியாபாரிகள் சங்கம், மாணவர்கள் சங்கம் மாதிரி சங்கம் அமைத்துத் திருடி வந்த பிக்பாக்கெட் கொள்ளையர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஸ்களிலும், நெரிசல் அதிகமுள்ள இடங்களிலும் பொது மக்களின் பாக்கெட்கள், பைகளில் இருக்கும் பர்ஸ் மற்றும்பணத்தை மிக லாவகமாக சுடுபவர்கள் இந்த பிக்பாக்கெட் ஆசாமிகள்.

இவர்கள் கையைவிடுவதும் தெரியாது, பொருளை எடுப்பதும் தெரியாது. மின்னல் வேகத்தில் மிக எச்சரிக்கையாகஅதைச் செய்வார்கள்.

பஸ்களில் படிக்கட்டுகளில் நின்று கொண்டு விரல்களில் போட்டிருக்கும் மோதிரங்களைக் கூட இழுத்துவிடுவார்கள். மோதிரத்தைப் பறித்தவர் பஸ்ஸைவிட்டு இறங்குவார், இதை நாம் பார்த்துவிட்டு பஸ்ஸை விட்டுஇறங்கி அவரைப் பிடிக்க முற்படுவோம்.

ஆனால், நம்மால் பஸ்ஸைவிட்டு இறங்க முடியாத அளவுக்கு ஒரு கூட்டம் படிக்கட்டை ஆக்கிரமித்து நம்மைத்தடுக்கும். இந்தக் கும்பல் மோதிரத்தைத் திருடியவனின் ஆட்கள் தான் என்பது நமக்குத் தெரியாது. பஸ் புறப்படும்வரை நம்மை இறங்கவே விடாமல் தடுத்து விடுவார்கள். நாமும் கத்திப் பார்த்துவிட்டு பஸ் புறப்பட்டவுடன்அமைதியாகி விடுவோம்.

அவன் போயிட்டான் சார்... அவனை இனி எங்கே போய் பிடிப்பீங்க என்று அந்த கும்பல் நமக்கு ஆறுதல்கூறிவிட்டு கூடவே வரும்.

இந்த பிக்பாக்கெட் பேர்வழிகள் எப்போதும் ஒரு கும்பலாகத் தான் செயல்படுவார்கள். ஒருவன் மாட்டிக்கொண்டாலும் கூட கூட்டமாக வந்து பஞ்சாயத்து பேசுவது போல பேசி அவனைக் காப்பாற்றி அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

சென்னையில் இந்தக் கும்பல்களின் கொடுமை அதிகரித்துவிட்டதையடுத்து இவர்களைப் பிடிக்க தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படையிடம் இதுவரை 20 பேர் பிடிபட்டுள்ளனர்.

பிக்பாக்கெட்டுகளை பிடிப்பதில் நிபுணரான துணை கமிஷ்னர் மாரியப்பன் தலைமையில் 10 போலீசார் இந்தப்படையில் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் இவர்கள் அண்ணா சாலையில் பஸ்சில் பயணிகள் போல பயணம்செய்து பிக்பாக்கெட் அடித்த ஒருவனைப் பிடித்தனர்.

பின்னர் மற்ற ரூட் பஸ்களில் சென்று மேலும் 2 பேரைப் பிடித்தனர். இவர்களை ஸ்டேசனுக்குக் கொண்டு போய்அடித்துப் பின்னி எடுத்தனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 17 பேரை இப் படையினர் சுற்றிவளைத்தனர்.

இதில் பல பிக்பாக்கெட் பேர்வழிகள் லட்சாதிபதிகளாக இருப்பதும் லாரி சர்வீஸ் நடத்தி வருவதும் தெரியவந்தது.மேலும் தங்கள் தொழிலைத் திறம்பட நடத்த ஒரு சஙகத்தையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர். இச் சங்கம் 30வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது என்பது தான் ஹை-லைட்.

இந்தச் சங்கத்தில் எப்படி பிக்பாக்கெட் அடிப்பது என்று புதிதாத இந்தத் தொழிலில் நுழைபவர்களுக்கு பயிற்சியும்அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இந்தச் சங்கத்தினர் 10 குழுவினராக தினமும் புறப்படுவர். ஒவ்வொருகுழுவும் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

கொள்ளையடித்த பணத்தில் 30 சதவீதம் சங்கத்துக்கு தந்துவிட வேண்டும். போலீசில் பிடிபட்டுவிடக் கூடாது.அப்படியும் மீறி 3 முறை போலீசில் பிடிபட்டுவிட்டால் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.

அதைவிட முக்கிய ரூல் இந்தச் சங்கம் குறித்து யாரிடமும் வாயைத் திறக்கக் கூடாது. போலீஸ் அடித்தால் கூடசங்கத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஆனால், துணை கமிஷ்னர் மாரியப்பனின் டீம் லத்தியை குண்டக்கமண்டக்க சுழற்றியதில் பிடிபட்ட பிக்பாக்கெட்டுக்குகள் உயிர் போய்விடும் என்று பயந்து சங்கத்தைக் காட்டிக்கொடுத்துள்ளனர்.

இந்தச் சங்கத்தின் தலைவன் பெயர் நயாபைசா நாகராஜன். இவன் இப்போது பெரிய லட்சாதிபதி. இவன் ஒரு லாரிசர்வீசையே நடத்திக் கொண்டிருக்கிறான். எல்லாம் நம் பாக்கெட் மணி தான்.

பிக்பாக்கெட் அடித்த பணத்தில் சென்னை சவுக்கார்பேட்டையில் சேட்டுகளுக்கு மத்தியில் மிக வசதியான வாழ்க்கைநடத்திக் கொண்டிருந்தான் நாகராஜன். இப்போது விழுப்புரத்துக்கு தனது இடத்தை மாற்றிவிட்டான். விழுப்புரத்தில்இருந்தாலும் சங்கத்தையும் அதன் உறுப்பினர்களையும் தொடர்ந்து வழி நடத்தி வந்துள்ளான்.

இவனது நெருங்கிய கூட்டாளிகள் 10 பேரும் பிடிபட்டுள்ளனர். அனைவரும் நல்ல வசதியான வாழ்க்கை நடத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர இவர்கள் கொடுத்த தகவலை வைத்து மேலும் 7 பேரையும் போலீசார் பிடித்துள்ளனர்.

பிடிபட்ட ஒருவனின் மனைவி மாநகராட்சி பள்ளி ஆசிரியை, இன்னொருவன் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறான்.இன்னொருவனுக்கு ஆட்டோக்கள் ஓடுகின்றன. பிக்பாக்கெட் அடித்த பணத்தில் இவர்கள் மிக நல்ல வாழ்க்கையைஅமைத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்கள் பிக்பாக்கெட் பேர் வழிகள் என்பதை அவர்களின் குடும்பத்தினருக்குக் கூட போலீஸ் சொல்லித் தான்தெரியுமாம்.

அந்த அளவுக்கு மிக ரகசியமாக இந்த வேலையை இவர்கள் செய்து வந்துள்ளனர்.

இக் கும்பலைப் பிடித்த போலீசாரை கமிஷ்னர் விஜய்குமார் பாராட்டினார். பிக்பாக்கெட் அடித்து வரும்பெண்களையும் வளைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+