நீதிபதி அசோக் குமார் மீதான மதமாற்ற மோசடி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
சமீபத்தில் கிருஷ்ணகிரிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக் குமார் மீதுதொடரப்பட்டுள்ள மதமாற்ற மோசடி வழக்கில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
சிராஜுதின் என்பவர் இதுதொடர்பாக தொடர்ந்துள்ள வழக்கில், மாவட்ட நீதிபதி ஆக வேண்டும் என்பதற்காக தான்கிறிஸ்தவர் என்பதை மறைத்து விட்டு, தான் இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் என்று போலியான சான்றிதழைக்கொடுத்து பணியில் சேர்ந்துள்ளதாக நீதிபதி அசோக் குமார் மீது புகார் கூறியிருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறவிருந்த நேரத்தில்,நீதிபதி அசோக் குமார் பணி நியமனம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு கோர்ட்உத்தரவிட்டது. இதுதொடர்பாக மறு விசாரணை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும்நீதிபதி மிஸ்ரா ஆகியோரது தலைமையிலான பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு விசாரணைகளுக்குப் பிறகு தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை தள்ளி வைத்து இரு நீதிபதிகளும்உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications