சென்னை ஸ்டேட் பாங்கில் கொள்ளை முயற்சி: தடுத்த அதிகாரி குத்திக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள ஸ்டேட் பாங்கில் இன்று காலை நடந்த கொள்ளை முயற்சியைத் தடுத்த வங்கியின் துணைமானேஜர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பல கோடி ரூபாய் கொள்ளையைத் தனது உயிரைக் கொடுத்துத்தடுத்துள்ளார்அந்த ஊழியர்.

பெசன்ட் நகரில் உள்ள ஸ்டேட் வங்கி இன்று காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டது. அப்போது 3 பேர் அங்குவந்தனர். வங்கியின் காவலாளியான முருகேசனிடம் எப்போது டி.டி. கவுண்டர் திறப்பார்கள் என்று அவர்கள்கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளிக்கும் முன்பே இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மேலும் 4 பேர் வந்தனர். அவர் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவரை தாக்கத் தொடங்கினர். அவரது வாயில் துணித்ை திணித்து, முகத்தைக் கருப்புத்துணியால் மூடிய அந்த நபர்கள் அவரை வங்கிக்குள் இழுத்துச் சென்று கட்டிப் போட்டனர்.

வங்கிக்குள் அப்போது 5 ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். பின்னர் அந்தக் கும்பல் வங்கி ஊழியர்கள் கோபால் ரத்தினம், துணை மேலாளர்விஸ்வநாதன் ஆகியோரை கத்தியைக் காட்டி மிரட்டி வங்கியின் லாக்கர் சாவியைக் கேட்டனர்.

கோபால் ரத்தினம் அவர்களை எதிர்க்கவே அவரை அக்கும்பல் கத்தியால் குத்தியது. இதில் அவர் காயமடைந்தார். அதேபோலவிஸ்வநாதனும் முரண்டு சாவியைத் தர முடியாது என்று அந்த கொள்ளையர்களுடன் மோதினார். உடனே அவரையும் அக் கும்பல்கத்தியால் குத்தியது. இருப்பினும் அவருக்கு பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை.

அதன் பின்னர் விஸ்வநாதனிடமிருந்து சாவியை பறித்துக் கொண்டு அவரை அக் கும்பல் கட்டிப் போட்டது. பின்னர் இவர்கள் நேராக பணம்வைக்கப்பட்டிருந்த லாக்கர் அறைக்குச் சென்றனர். லாக்கரை திறக்க முயன்றபோது அங்கிருந்த அபாய மணி அலறத் தொடங்கியது. இதேநேரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த விஸ்வநாதன் திமிறிக் கொண்டு எழ முயன்றார்.

இதைப் பார்த்த அக்கும்பல் விஸ்வநாதன்தான் அலாரத்தை அலற விட்டு விட்டார் என்று தவறாக நினைத்தது. இதையடுத்து அவரைகத்திகளால் சரமாரியாகக் குத்தினர். ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார் விஸ்வநாதன்.

இதையடுத்து அக் கும்பல் வங்கியிலிருந்து வெளியே ஓடிவந்தது. வழியில் குறுக்கிட்ட அண்ணாமலை என்பவரை கத்தியால் குத்தி கீழேதள்ளினர். பின்னர் வங்கிக்குள் வெடிகுண்டு ஒன்றை வீசினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அது வெடிக்கவில்லை. பின்னர் அக்கும்பல் தாங்கள்வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறித் தப்பி விட்டது.

இந்த பரபரப்பான சம்பவத்தை அப்பகுதி பொதுமக்கள் நேரில் பார்த்து அதிர்ந்து போய் நின்றனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல்தரப்பட்டது. மாநகர ஆணையர் விஜயக்குமார், துணை ஆணையர் திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டன. கத்திக்குத்தில் காயமடைந்த விஸ்வநாதன், மோகன், அண்ணாமலை, கோபால் ரத்தினம் ஆகியோர்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் விஸ்வநாதன் பரிதாபமாக வழியிலேயே உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெசன்ட் நகரில் பட்டப் பகலில் நடந்துள்ள இந்த பயங்கர கொள்ளை முயற்சி மற்றும் கொலைச் சம்பவம் சென்னையில் பதற்றத்தைஏற்படுத்தியுள்ளது.

பணத்தைக் காப்பாற்றிய அலாரம்:

கொள்ளையர்களின் கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததற்கு முக்கியக் காரணம் அபாய மணி ஒலித்ததுதான். வழக்கமாக வங்கிகள்அனைத்திலும் பணம் வைக்கப்பட்டிருக்கும் பெட்டகங்களில் அபாய மணி பொருத்தப்பட்டிருக்கும். அதை ஆன் செய்யவும், ஆப்செய்யவும் சுவிட்சுகள் உள்ளன.

வங்கி ஊழியர்கள் இங்கிருந்து பணம் எடுக்கும்போது சுவிட்சை ஆப் செய்து விட்டு எடுப்பார்கள். இல்லாவிட்டால் மணி ஒலிக்கத்தொடங்கும். பயங்கர சப்தத்துடன் அது ஒலிப்பதால் வங்கிக்கு வெளியேயும் சப்தம் பலமாக கேட்கும்.

கொள்ளையர்கள், அவசரத்தில் சுவிட்சை ஆப் செய்யாமல் லாக்கரைத் திறக்க முயன்றுள்ளனர். இதனால் மணி ஒலிக்கத் தொடங்கி விட்டது.பயந்து போன அவர்கள் விஸ்வநாதன்தான் இதற்குக் காரணம் என்று தவறாக எண்ணி அவரைக் கொன்று விட்டு தப்பி விட்டனர்.

துயரத்தில் வங்கி ஊழியர்கள்:

பாரத ஸ்டேட் வங்கியின் துணை மேலாளராக இருந்து வந்த விஸ்வநாதன் பெசன்ட் நகர் பகுதியில்தான் வசித்து வந்தார்.

அவரது மனைவி கமலா. தாயார் பாலாம்மாள். இவருக்கு பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களில்பாலகிருஷ்ணன் ஹாங்காங்கில் பொறியாளராக இருக்கிறார். ராமகிருஷ்ணன் பொறியியல் படித்து வருகிறார்.

காலையில் வேலைக்குச் சென்ற விஸ்வநாதன் பிணமாக வீடு திரும்பியதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பெரும்சோகத்தைத் தந்தது. சென்னை முழவதிலும் இருந்து ஸ்டேட் வங்கி ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் விஸ்வநாதனின் இல்லத்தில்குவிந்தனர்.

துப்பு தந்தால் 1 லட்சம் பரிசு:

இந் நிலையில் கொள்ளையர்களை சுட்டுப் பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுளளது.

இந்தக் கொள்ளையர்கள் குறித்து தகவல் தந்தால் ரூ. 1 லட்சம் பரிசளிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

கொள்ளையர்களைப் பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொள்ளையர்கள் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் 8555069, 8555036 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம்.அல்லது 100ம் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தரலாம்.

தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+