கருணாநிதி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வழங்கப்பட்ட டான்சி வழக்கு தீர்ப்பு குறித்து முரசொலி பத்திக்கையில் கார்ட்டூன்மற்றும் செய்திகள் மூலம் நீதிபதிகளையும், நீதித்துறையையும் கருணாநிதி அவமதித்து விட்டதாக தமிழக அரசுசார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் அடங்கியமுதலாவது பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரனின் வாதத்துடன் இந்தவிசாரணை முடிவடைந்தது. வழக்கறிஞர் சந்திரன் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:

டான்சி மற்றும் கொடைக்கானல் ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா மற்றும் பிறர் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புவெளியானவுடன், கருணாநிதியன் முரசொலி பத்திரிக்கையில் கட்டுரைகள் மற்றும் கார்ட்டூன்கள் வெளியாகின.

நீதியை விலை கொடுத்து வாங்கி விட்டதாகவும், நீதியை யார் வேண்டுமானாலும் முன் கூட்டியே நிர்ணயிக்கமுடியும் என்ற ரீதியிலும் இவற்றில் வாசகங்கள் இருந்தன.

இவை பொதுமக்கள் மத்தியில் நீதிபதிகள் குறித்தும், நீதித்துறை குறித்தும் தவறான கருத்தைப் பரப்பும் வகையில்உள்ளன. நீதியை யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி விட முடியும் என்று பொதுமக்கள் கருத வாய்ப்புஏற்பட்டு விட்டது.

எனவே கருணாநிதியின் இந்தக் கருத்து நீதித்துறையை நேரடியாக அவமானப்படுத்திய செயலாகும். அவருக்குஉரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார் சந்திரன்.

கருணாநிதியின் சார்பில் வழக்கறிஞர் நடராஜன் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்புஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+