ஜெவுக்கு எதிராக திமுக உரிமை மீறல் பிரச்சனை
சென்னை:
காவிரி விவகாரத்தில் தவறான தகவல் கொடுத்த முதல்வர் ஜெயலலிதா, நிதியமைச்சர் பொன்னையனுக்கு எதிராகஉரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கான கோரிக்கையை சபாநாயகர் காளிமுத்துவிடம் திமுக எம்.எல்.ஏக்கள் வழங்கினர்.
இது குறித்து சட்டசபையில் பேசிய சபாநாயகர், என்னிடம் தரப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்சனையைஅனுமதிப்பதா இல்லையா என்று ஆய்வு செய்து வருகிறேன். அவையின் பழைய கோப்புகளைப் படித்துவிட்டுத்தான் இதில் முடிவு செய்ய முடியும் என்றார்.
சர்க்காரியா கமிஷன் விவகாரத்தில் இருந்து தப்புவதற்காகத் தான் காவிரி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில்இருந்து கருணாநிதி வாபஸ் பெற்றார் என்று குற்றம் சாட்டிய ஜெயலலிதா இன்று அந்தக் குற்றச்சாட்டைத் திரும்பப்பெறுவதாகவும், தவறுதலாக அப்படிப் பேசிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறிய ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுகருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications