சட்டசபையை அரசியல் மேடையாக்குவதா? - அதிமுகவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை:
நிதி அமைச்சர் பொன்னையன் தமிழக சட்டசபையை அரசியல் மேடையாக்கி 4 மணி நேரத்தை வீணடித்து விட்டார்என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக இன்று (புதன்கிழமை) மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏவான நன்மாறன் சட்டசபையில்பேச முயற்சித்தார்.
சபாநாயகர் காளிமுத்து வராததால் இன்றைய சட்டசபையை வழிநடத்திச் சென்ற துணை சபாநாயகரானஅருணாச்சலம், நன்மாறனைப் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த மற்றொரு மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏவான கருணாகரன், "தேவையில்லாதபேச்சுக்களையெல்லாம் பேசி 4 மணி நேரத்தை வீணடிக்க பொன்னையனுக்கெல்லாம் பேச அனுமதிகொடுப்பீர்கள். ஆனால் எதிர்க் கட்சிகளாகிய நாங்கள் பேசுவதற்கு மட்டும் அனுமதி தர மாட்டீர்கள்" என்றுகூறினார்.
இதை அவையிலிருந்த பொன்னையன் சரியாகக் கவனிக்கவில்லை. இருந்தாலும் நன்மாறனைப் பேச அனுமதித்தார் அருணாச்சலம். அவரும் தன்னுடைய பேச்சை ஐந்து நிமிடத்திற்கெல்லாம்முடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications