நேரடி ஒளிபரப்புக்கு புலிகள் தடை
கிளிநொச்சி:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பேட்டியை நேரடியாக ஒளிபரப்ப அந்தஅமைப்பு தடை செய்துவிட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பலமுறை தள்ளிப் போடப்பட்டுக் கொண்டேஇருந்தது.
பிரபாகரனைச் சந்திப்பதற்காக வந்திருந்த நிருபர்கள், கேமரா மேன்கள் அனைவரும் கடுமையாகச்சோதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் நடந்த இதுபோன்ற ஒரு பத்திரிக்கை நிருபர்கள்சந்திப்பின்போதுதான், நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரின் ராணுவத் தளபதியாக இருந்த அகமத் ஷா மசூத்என்பவர் படுகொலை செய்யப்பட்டார். நிருபர்கள் என்ற போர்வையில் வந்த அந்த அல்-காய்தா தீவிரவாதிகள்வீடியோ கேமராவில் குண்டுகளை வைத்திருந்தனர். பேட்டி ஆரம்பித்தவுடன் வீடியோ கேமரா வெடித்து அகமத்ஷா மசூத் இறந்தார்.
இதுபோன்ற சம்பவம் இங்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே அனைத்து நிருபர்களின் வீடியோமேகராக்களையும் புகைப்பட கேமராக்களையும் புலிகள் கடுமையாக பரிசோதித்தனர்.
நேரடி ஒளிபரப்புக்காக நிருபர்கள் கொண்டு வந்திருந்த அனைத்து உபகரணங்களையும் புலிகள் வாங்கி வைத்துக்கொண்டனர். இந்த உபகரணங்கள் மூலம் செயற்கைக் கோள்களைத் தொடர்பு கொள்ள முடியும் என்பதால்பிரபாகரனின் மறைவிடத்தை செயற்கைக் கோள்கள் பதிவு செய்துவிடும். இதனால் நேரடி ஒளிபரப்புக்குபிரபாகரன் அனுமதி தரவில்லை.
ஒவ்வொரு நிருபரையும் கால் மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் சோதனை செய்தனர்.
இந்தச் சோதனைகளுக்குப் பிறகு நிருபர்களுடைய உபகரணங்களை அவர்களிடமே திருப்பி அளித்துவிட்டபோதிலும், அவர்கள் நேரடி ஒளி-ஒலிபரப்பு செய்ய புலிகள் தடை விதித்து விட்டனர்.
இதனால் நேற்று மாலை பிரபாகரன் பேட்டியளித்த போதிலும், இரவு 8 மணி வரை எந்தச் செய்தி நிறுவனத்துக்கும்பேட்டி தொடர்பான விவரங்கள் கிடைக்கவேயில்லை.
நிருபர்கள் சந்திப்பையொட்டி வன்னிப் பகுதி முழுவதும் புலிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.வான் வழி, தரை வழி மற்றும் கடல் வழி என்று எந்தவிதமான தாக்குதலையும் சமாளிப்பதற்கு புலிகள் தயார்நிலையில் இருந்தனர்.
சுமார் 2 மணி நேரம் பேட்டியளித்த பிரபாகரன், நிருபர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கும் சரியானஉணவு-இருப்பிட வசதி அளிக்கப்படாததற்கும் வருத்தம் தெரிவித்தார்.
பிரபாகரன் பேட்டியளித்த மேடையில் கருப்புக் கண்ணாடிகள் அணிந்த புலிகளின் உளவுப் பிரிவினர்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
பேட்டி முடிந்த பிரபாகரன் எழுந்தவுடன் அவரை உளவுப் பிரிவினர் சூழ்ந்து நின்று கொண்டனர். உடனடியாகஅவர் மறைவிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார்.
முன்னதாக நிருபர்கள் காலை முதல் மாலை வரை புலிகள் குறித்த வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த புலிகளிடம் அவர்கள் மிக சகஜமாக பேச முடிந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications