"ஐ.எஸ்.ஐ." இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகளுக்குத் தடை
சென்னை:
மினரல் வாட்டர் என்று கூறிக் கொண்டு பாலிதீன் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தண்ணீர்பாக்கெட்டுகளில் ஐ.எஸ்.ஐ. முத்திரை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
அப்படி இல்லாமல் விற்கப்படும் தண்ணீர் பாக்கெட்டுகள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம்கூறியுள்ளது.
வாணிஸ்ரீ என்ற பெண் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவில்,
குடிநீர் பாக்கெட்டுகளை தயாரித்து விற்கும்போது அதில் ஐ.எஸ்.ஐ. எனப்படும் தரச் சான்றிதழ் முத்திரை இடம்பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
முத்திரை இல்லாத குடிநீர் பாக்கெட்டுகளுக்கு ராஜஸ்தான் மாநில அரசு தடை விதித்துள்ளது.
அதுபோல தமிழக அரசும் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகளைத் தடை செய்ய உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஐ.எஸ்.ஐ. முத்திரைஇல்லாத குடிநீர் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய தடை விதித்துத் தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications