மோடி நீக்கப்படுவாரா?- கோவாவில் கூடுகிறது பாஜக செயற்குழு
பனாஜி:
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் கோவாவின் தலைநகரான பனாஜியில் இன்று (வெள்ளிக்கிழமை) பாஜகசெயற்குழுக் கூட்டம் கூடுகிறது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரஸ் ஆகியதேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் போர்க்கொடி எழுப்பி வருகின்றன.
ஆனால் மோடியை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜகவின் தலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தி நேற்றேதெளிவாகக் கூறிவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு ஹைதராபாத்தில் கூடிய தெலுங்கு தேசக் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக்கூட்டத்தில், மோடியை நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
30 எம்.பிக்களைக் கொண்டிருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்தே ஆகவேண்டியசூழ்நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவின் செயற்குழுக் கூட்டம் இன்று பிற்பகல் பனாஜியில் நடைபெறவுள்ளது.மோடியை நீக்குவதா வேண்டாமா என்ற பிரச்சனைதான் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படஉள்ளது.
சிங்கப்பூர் மற்றும் கம்போடிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவுதான் டெல்லி திரும்பியவாஜ்பாய், இன்று நேரடியாக பனாஜி புறப்பட்டு வந்துள்ளார்.
குஜராத்தில் தற்போது முகாமிட்டுள்ள மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லியும் மோடியை அழைத்துக் கொண்டுபனாஜிக்கு வந்து சேர்ந்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமையுமா என்பது குறித்தும் இன்றை செயற்குழுக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications